Monday, 30 April 2018

திருமணம் தடை தாமதம் ஏன்

திருமணம் தடைக்கான அமைப்பு
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் பாவகிரகங்கள் பாதிப்பு ஏற்படும், போது திருமணம் தடைகள் ஏற்படும்,
ஏழாம் இடத்தில் ராகு,கேது ,செவ்வாய், சனி,போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் திருமணம் தடை ஏற்படும், இந்த பாவ கிரகங்கள் இரண்டாம் இடம் அல்லது ஏழாம் இடத்தை பார்த்தாலோ அல்லது தொடர்பு கொண்டாலோ அல்லது இந்த இடங்களில் இருந்தாலோ திருமணம் தாமதமாக நடைபெறும், சுக்கிரன் எழாம் இடத்தில் இருப்பதும் ,சுக்கிரன், பூசம், அனுசம் ,உத்திரட்டாதி, நட்சத்திரங்கள் பாதத்தில் இருப்பதும் சுக்கிரன் அசுவினி, மகம் ,மூலம் ,போன்ற கேதுவின் நட்சத்திரங்கள் பாதத்தில் இருப்பதும் திருமணம் தாமதம் ஏற்படுகிறது, சுக்கிரன் புதன் சேர்க்கை ,கேது சுக்கிரன் சேர்க்கை, சுக்கிரன் ,சனி சேர்க்கை,செவ்வாய், சனி சேர்க்கை, பார்வை மிகுந்த தடை ஏற்படுத்தும்,
ஏழாம் அதிபதியுடன் பதினொன்றாம் அதிபதி சேர்க்கை தார தோசம் இதனாலும் திருமணம் தடை ஏற்படுத்தும், ஏழாம் அதிபதி 6'8'12 ம் இடங்களில் மறைவது, இரண்டாம் அதிபதி 6'8'12 ம் இடங்களில் மறைவது, திருமணத்தை தாமத படுத்தி அதிக வரன் பார்க்க வைக்கும், ஏழாம் அதிபதி 6'8'12 ம் அதிபதி யுடன் சேர்ந்தாலும் திருமணம் தாமதம் ஏற்படும், கேது திசை நடந்தாலும் திருமணம் தாமதம் ஏற்படும், அதிக கிரகங்கள் கேதுவின் நட்சத்திரங்கள் பாதத்தில் இருப்பது திருமணம் தாமதம் ஏற்படும்

No comments:

Post a Comment